வணக்கம் கபடி ரசிகர்களே. இன்று நாம் பார்க்க இருப்பது நமது தமிழ் தலைவாஸ் அணி கேப்டன் அஜய் தாகூர் புரோ கபடி போட்டியில் எந்த அணியில் விளையாடி எத்தனை புள்ளிகள் எடுத்தார், எத்தனை ரைடு சென்றார், எத்தனை போட்டியில் விளையாடினார் மற்றும் அவரின் ரைடு புள்ளிகளின் சதவீதம் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.
சீசன் 1
அஜய் தாகூர் முதல் சீசனில் பெங்களூரு புல்ஸ் அணிக்காக விளையாடினார். சீசன் 1'ல் மொத்தம் 15 போட்டியில் விளையாடி உள்ளார், மொத்தம் சீசன் 1'ல் அவர் 228 ரைடு சென்று 127 புள்ளிகள் எடுத்துள்ளார், சீசன் 1'ல் அவரது புள்ளிகளின் சதவீதம் 53.5% ஆகும்.
சீசன் 2
சீசன் இரண்டிலும் அஜய் தாகூர் பெங்களூர் அணிக்கே விளையாடினார், சீசன் 2'ல் அவர் 13 போட்டியில் விளையாடினார், அந்த சீசனில் 190 ரைடுகள் சென்று 80 புள்ளிகள் எடுத்துள்ளார், சீசன் 2'ல் அவரது புள்ளிகளின் சதவீதம் 41.57% ஆகும்.
சீசன் 3
சீசன் 3'ல் அஜய் தாகூரை புனேரி பல்டன் அணி ஏலத்தில் எடுத்தது. சீசன் 3'ல் அவர் 14 போட்டியில் விளையாடியுள்ளார். அந்த சீசனில் 148 ரைடுகள் சென்று வெறும் 56 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது புள்ளிகளின் சதவீதம் வெறும் 35.13% ஆகும். அஜய் தாகூருக்கு புரோ கபடி சீசன் 3 மிகவும் மோசமான சீசனாக அமைந்தது.
சீசன் 4
சீசன் நான்கில் மீண்டும் புனேரி பல்டன் அணிக்காகவே விளையாடினார், 16 போட்டிகள் விளையாடி 155 ரைடுகள் சென்று 64 புள்ளிகள் எடுத்தார்.
சீசன் 5
சீசன் 5'ல் அஜய் தாகூருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ஏனென்றால் அவர் முதல் முறையாக புரோ கபடி தொடரில் கேப்டன் பதவி கிடைத்தது தமிழ் தலைவாஸ் அணியில். அந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காக 22 போட்டியில் விளையாடினார், பின்பு 407 ரைடு சென்று 222 புள்ளிகள் எடுத்துள்ளார், அவரது ரைடு சதவீதம் 52.33% ஆகும்.
சீசன் 6
சீசன் 6'ல் மீண்டும் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடினார் அஜய் தாகூர் அவர் 22 போட்டியில் விளையாடி 388 ரைடுகள் சென்று 204 புள்ளிகள் பெற்றுள்ளார்.
இந்த முறையும் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாட உள்ளார் அஜய் தாகூர், இந்த சீசனில் எவ்வளவு புள்ளிகள் பெறுவார், எத்தனை போட்டியில் விளையாடுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
0 Comments