வணக்கம் கபடி ரசிகர்களே. இன்று நாம் பார்க்க இருப்பது ஈரோடு மாவட்டம் நாதகவுண்டம் பாளையம் கபடி போட்டியில் நடந்த காலிறுதிப் போட்டி SKS நேரு பாய்ஸ் ஈரோடு vs 7 லயன்ஸ் Ngp அணி விளையாடிய கபடி போட்டியை பற்றி தான்.
7 லயன்ஸ் அணியும் மற்றும் நேரு பாய்ஸ் ஈரோடு அணியும் தமிழகத்தின் தலைசிறந்த கபடி அணிகள் ஆகும்... இந்த இரு அணிகளும் சம பல பலம் வாய்ந்த அணிகள்.ஈரோடு அணியில் கார்த்தியும் 7 லயன்ஸ் அணியில் ரம்மியும் நட்சத்திர வீரர்கள் ஆவர்
போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை மாறி மாறி பெற்று சம புள்ளிகளுடன் இருந்தனர், ஒரு கட்டத்தில் 7 லயன்ஸ் அணியினர் அற்புதமாக விளையாடி பல புள்ளிகள் முன்னிலை பெற்றனர், முதல் பாதி ஆட்ட நேர முடிவில் ஈரோடு 19 புள்ளிகளையும் 7 லயன்ஸ் அணி 36 புள்ளிகளையும் பெற்று முன்னிலை வகித்தது 7 லயன்ஸ் NGP அணி
இரண்டாவது பாதியிலும் அதே நிலைமை ஈரோடு அணிக்கு ஏற்பட்டது, ஈரோடு அணி புள்ளிகளை பெற மிகவும் சிரமப்பட்டனர், ஆனால் 7 லயன்ஸ் அணி அனல் பறக்க விளையாடி பெருவாரியான புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து கொண்டே இருந்தது, ஆட்ட முடிவில் 7 லயன்ஸ் 55 புள்ளிகளையும் ஈரோடு 33 புள்ளிகளையும் பெற்று பரிதாபமாக தோல்வி பெற்றது நேரு பாய்ஸ் ஈரோடு அணி
ஈரோடு அணியில் சிறப்பாக விளையாடிய கார்த்திக்கு சிறப்பு பரிசு வழங்கிய போது...
இதோ உங்களுக்காக அந்த
போட்டியின் வீடியோ...
0 Comments