வணக்கம் கபடி ரசிகர்களே. இன்று நாம் பார்க்க இருப்பது ஈரோடு மாவட்டம் நாதகவுண்டம் பாளையம் கபடி போட்டியில் நடந்த ஸ்டார் ஸ்போட்ஸ் திருகாட்டுபள்ளி vs SKS நேரு பாய்ஸ் ஈரோடு அணி விளையாடிய போட்டியை பற்றி தான்...
இரு அணிகளும் சம பல பலம் வாய்ந்த அணிகள் என்றாலும் SKS நேரு பாய்ஸ் ஈரோடு அணி திருகாட்டுபள்ளி அணியை விட சற்று பலம் வாய்ந்த அணியாகும்
போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை மாறி மாறி சம புள்ளிகளை பெற்று வந்தனர், முதல் பாதி ஆட்ட நேர முடிவில் ஈரோடு 12 புள்ளிகளையும் திருகாட்டுபள்ளி 13 புள்ளிகள் எடுத்து ஒரு புள்ளி முன்னிலையில் இருந்தது...
இரண்டாவது பாதியிலும் அதே போல பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது போல அமையவில்லை, ஈரோடு அணி இரண்டாவது பாதியில் தொடக்கத்தில் இருந்தே 6 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து கொண்டே இருந்தது, கடைசி வரை திருக்காட்டுபள்ளி அணியால் ஈரோடு அணியின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை... இறுதியில் ஈரோடு 33 திருக்காட்டுபள்ளி 24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தாங்கள் தான் தலைசிறந்த அணியென நிருபித்தது...
இதோ உங்களுக்காக அந்த போட்டியின் வீடியோ......
0 Comments