Income Tax Chennai vs Erode 7 Lions - NGP State Kabaddi Match Semi Final HD


வணக்கம் கபடி ரசிகர்களே. இன்று நாம் பார்க்க இருப்பது ஈரோடு மாவட்டம் நாதகவுண்டம் பாளையம் கபடி போட்டியில் நடந்த இரண்டாவது அரைஇறுதி போட்டியான Income Tax சென்னை vs 7 லயன்ஸ் ஈரோடு அணி விளையாடிய கபடி போட்டியை பற்றி தான் 

Income Tax சென்னை அணி தமிழகத்தின் தலைசிறந்த கபடி அணியாகும், அதே அளவிற்கு சம பலம் வாய்ந்த அணி தான் ஈரோடு 7 லயன்ஸ் அணி 

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை மாறி மாறி பெற்று வந்தனர், ஆனால் சிறிது நேரத்தில் ஈரோடு 7 லயன்ஸ் அணி மளமளவென புள்ளிகளை பெற்று விளையாடியது, முதல் பாதி ஆட்ட நேர முடிவில் ஈரோடு 22 புள்ளிகளையும் Income Tax சென்னை வெறும் 10 புள்ளிகளையும் பெற்று அதிர்ச்சி அளித்தது 

பின்பு இரண்டாவது பாதியிலும் அதே போல ஈரோடு அணியின் கையே ஓங்கியது, Income Tax சென்னை அணி புள்ளிகளை பெற மிகவும் சிரமப்பட்டனர் ஆனால் ஈரோடு 7 லயன்ஸ் அணி மளமளவென புள்ளிகளை பெற்று விளையாடியது. இறுதியில் Income Tax சென்னை வெறும் 20 புள்ளிகளையும் ஈரோடு 7 லயன்ஸ் 34 புள்ளிகளையும் பெற்று ஆட்டத்தை முடித்தது... இந்த மாபெரும் வெற்றியின் மூலம் ஈரோடு 7 லயன்ஸ் அணி தமிழகத்தின் தலைசிறந்த கபடி அணியாக உருவெடுத்தது 

இதோ உங்களுக்காக அந்த
 போட்டியின் வீடியோ... 


Post a Comment

0 Comments