வணக்கம் கபடி ரசிகர்களே. இன்று நாம் பார்க்க இருப்பது ஈரோடு மாவட்டம் நாதகவுண்டம் பாளையம் கபடி போட்டியில் நடந்த நாகை ஸ்போட்ஸ் கிளப் நாகப்பட்டினம் vs அண்ணைத்தமிழ் திருச்செங்கோடு அணி விளையாடிய கபடி போட்டியினை பற்றி தான்
நாகப்பட்டினம் அணி தமிழகத்தின் தலைசிறந்த கபடி அணியாகும், அந்த அணியில் விளையாடும் கேசவன் K7 தமிழகத்தின் தலைசிறந்த கபடி வீரர் ஆவார், திருச்செங்கோடு அணியை விட நாகப்பட்டினம் அணி சற்று பலம் வாய்ந்த அணியாகவே காணப்பட்டது
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே நாகப்பட்டினம் அணியே முன்னிலை வகித்தது, இருப்பினும் திருச்செங்கோடு அணியும் அவ்வப்போது புள்ளிகளை பெற்று வந்தனர், முதல் பாதி ஆட்ட நேர முடிவில் நாகப்பட்டினம் 21 திருச்செங்கோடு 11 புள்ளிகளை பெற்று பெருவாரியான புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தனர் நாகப்பட்டினம் அணி
இரண்டாவது பாதியிலும் அதே போல நாகப்பட்டினம் அணியே முன்னிலை வகித்தது, நாகப்பட்டினம் 24 திருச்செங்கோடு 14 புள்ளிகளை பெற்று தாங்கள் தான் தலைசிறந்த அணியென நிருபித்து வெற்றி பெற்றது நாகப்பட்டினம் அணி 😎
இதோ உங்களுக்காக அந்த
போட்டியின் வீடியோ.
0 Comments