நாதகவுண்டம்பாளையம் மாநில கபடி போட்டியின் முடிவுகள் | NCP National Kabaddi Match Results



வணக்கம் கபடி ரசிகர்களே... இன்று நாம் பார்க்க இருப்பது ஈரோடு மாவட்டம் நாதகவுண்டம் பாளையம் கபடி போட்டியின் சில சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி தான்... 



இப்போட்டியில் தமிழகத்தின் தலைசிறந்த கபடி அணிகளான துர்காம்பிகை திருநெல்வேலி, வருமான வரித்துறை சென்னை, நாகப்பட்டினம் நாகை ஸ்போட்ஸ் கிளப் , ஈரோடு நேரு பாய்ஸ், கன்னியாகுமரி மூலச்சல், ஈரோடு 7 லயன்ஸ், MG தோகைமலை கரூர், திருச்சி அல்லூர், சேலம் சாமி பிரதர்ஸ், பெங்களூர், ஸ்டார் ஸ்போட்ஸ் திருகாட்டுபள்ளி என பல்வேறு அணிகள் போட்டியில் பங்கு பெற்றனர்... 

ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக 25,000 ரொக்கம் மற்றும் கோப்பை , இரண்டாவது பரிசாக 15,000 ரொக்கம் மற்றும் கோப்பை, மூன்றாவது மற்றும் நான்காவது பரிசாக ரூ. 10,000 மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது 

பெண்கள் பிரிவில் முதல் பரிசாக 10,000, இரண்டாவது பரிசாக 7000, மூன்றாவது மற்றும் நான்காவது பரிசாக 4000 மற்றும் நான்கு பரிசுகளுக்கும் கோப்பை வழங்கப்பட்டது... 

ஆண்கள் பிரிவில் முதல் பரிசை நாதகவுண்டம்பாளையம் 7 லயன்ஸ் பெற்றது



இரண்டாவது பரிசினை அம்மன் அணி அல்லூர் திருச்சி அணி பெற்றது 



மூன்றாவது பரிசினை வருமான வரித்துறை சென்னை அணி மற்றும் கன்னியாகுமரி மூலச்சல் அணி பகிர்ந்து கொண்டனர்...

வருமான வரித்துறை சென்னை

கன்னியாகுமரி மூலச்சல்

மேலும் இது போன்று கபடி தகவல்களை காண தினமும் நமது வெப்சைட்டை பார்வையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் 😊

இதோ உங்களுக்காக போட்டியின் வீடியோ...


Post a Comment

0 Comments