கருமாண்டி செல்லிபாளையம் மாநில கபடி போட்டியின் இறுதி போட்டி மற்றும் முடிவுகள் - Karumamdi SelliPalayam National Kabaddi Match Results




வணக்கம் கபடி ரசிகர்களே ஈரோடு மாவட்டம் கருமாண்டி செல்லிபாளையத்தில் மாநில கபடி போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் தமிழகத்தின் தலைசிறந்த கபடி அணிகளான ICF சென்னை, Postal சென்னை, Income Tax சென்னை, துர்காம்பிகை திருநெல்வேலி, Diamond Star மேட்டுப்பாளையம், அளத்தங்கரை AZ, சேலம் சாமி பிரதர்ஸ், நேரு பாய்ஸ் நம்பியூர் என சுமார் 55 அணிகள் அந்த போட்டியில் பங்கு பெற்று போட்டு கொண்டனர். ICF சென்னை அணி தனது இரண்டாவது சுற்றில் துரைசிங்கம் தூத்துக்குடி அணியுடன் தோல்வி கண்டு அதிர்ச்சி அளித்தது. பின்பு Income Tax சென்னை அணி காலிறுதியில் திருநெல்வேலி அணியுடன் தோல்வியுற்றது.  தூத்துக்குடி துரைசிங்கம் அணி Postal சென்னையிடம் காலிறுதியில் தோல்வியுற்றது.  

பின்பு அரைஇறுதியில் Postal சென்னை அணியும் Diamond Star மேட்டுப்பாளையம் அணியும் மோதினர். இதில் Diamond Star மேட்டுப்பாளையம் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் திருநெல்வேலி அணியும் அதனை எதிர்த்து அளத்தங்கரை அணியும் மோதினர். இதில் திருநெல்வேலி அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்... 

<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- Ad 1 -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-6153614730097109"
     data-ad-slot="5496770154"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

பின்னர் நடந்த இறுதி போட்டியில் திருநெல்வேலி அணியும் மேட்டுப்பாளையம் அணியும் மோதினர். தொடக்கத்தில் இருந்தே மேட்டுப்பாளையம் அணி முன்னிலை வகித்தனர். இறுதியில் 23 க்கு 29 என்ற புள்ளிக்கணக்கில் மேட்டுப்பாளையம் அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.

முதல் பரிசு பெற்ற மேட்டுப்பாளையம் Diamond Star அணி



இரண்டாவது பரிசு பெற்ற திருநெல்வேலி அணி



 மூன்றாவது பரிசு பெற்ற அளத்தங்கரை அணி 



மூன்றாவது பரிசு Postal சென்னை அணி 

போட்டி சிறந்த முறையில் நடைபெற்று முடிந்தது... 

இதோ உங்களுக்காக வீடியோ...




Post a Comment

1 Comments

  1. Well done my dear kabaddi players .......🤼🤼

    ReplyDelete